ரஷ்ய உதிரி பாகங்கள் தட்டுபாடு முக்கியத்துவம் பெறும் சுகோய் மேம்பாட்டு பணிகள் !!
1 min read

ரஷ்ய உதிரி பாகங்கள் தட்டுபாடு முக்கியத்துவம் பெறும் சுகோய் மேம்பாட்டு பணிகள் !!

இந்திய விமானப்படையின் முன்னனி போர் விமானங்களான சுகோய்30 விமானங்கள் ரஷ்யாவை உதிரி பாகங்கள் பெற நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் சுகோய்30 விமானங்களில் முழுமையாக இந்திய தயாரிப்பு பாகங்களை விரைவாக இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சூப்பர் சுகோய் மேம்பாட்டு பணிகளின் போது இந்த பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படௌ தீவிரம் காட்டி வருகிறது காரணம் ரஷ்ய நிறுவனங்களால் எதிர்காலத்தில் உதிரி பாகங்களை சப்ளை செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ரஷ்யாவில் இருந்து இந்தியா தனது போர் விமானங்களுக்கு இறக்குமதி செய்யும் உதிரி பாகங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 6000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்திய விமானப்படையின் சுகோய்30 போர் விமானங்களில் உள்ள 40க்கும் அதிகமான ரஷ்ய பாகங்களை மாற்றி விட்டு இந்திய பாகங்களை இணைக்க DRDO பணிகளை தொடங்கி உள்ளது என்பது கூடுதல் தகவல்.