அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் !!

  • Tamil Defense
  • March 5, 2022
  • Comments Off on அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் !!

சவுதி அரேபிய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என அந்நாட்டு பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நலன்களை பற்றி மட்டுமே அமெரிக்கா கவலைப்பட வேண்டும் எனவும் இதற்காக அமெரிக்க அதிபர் பைடன் தன்னை தவறாக நினைத்தாலும் கவலையில்லை என கூறியுள்ளார்.

எப்படி நாங்கள் உங்களுக்கு பாடம் எடுக்க கூடாதோ அது போல தான் நீங்களும் எங்களுக்கு பாடம் எடுக்க கூடாது என்றார் முன்னாள் அதிபர் ட்ரம்ப் உடன் வலுவான உறவை பேணியதும் குறிபிடத்தக்கது ஆகும்.