செயல்பாட்டுக்கு வந்த இரண்டாவது பொசைடான் படையணி !!

  • Tamil Defense
  • March 29, 2022
  • Comments Off on செயல்பாட்டுக்கு வந்த இரண்டாவது பொசைடான் படையணி !!

கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்ஸா படைத்தளத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது பொசைடான் வானூர்தி படையணி செயல்பாட்டுக்கு வந்தது.

INAS 316 ஆவது படையணி அதாவது இந்திய கடற்படை வானூர்தி படையணி-316 எனும் இந்த படையணிக்கு The Condors என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முதலாவது படையணி இயங்கி வருகிறது கிழக்கு பிராந்திய பகுதியை கண்காணிப்பது இதன் பொறுப்பாகும்.

கோவாவில் செயல்பாட்டுக்கு வந்த இந்த புதிய படையணி இந்தியாவின் மேற்கு கடலோர பகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் உலகின் மிகச்சிறந்த கடல்சார் விமானம் என்றால் மிகையல்ல.