
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணை வெளியுறவு செயலரான டொனால்ட் லூ சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகி வெளியுறவு விவகாரங்கள் பற்றி விளக்கமளித்தார்.
அப்போது அமெரிக்க அரசு உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை அமெரிக்காவின் பக்கம் சேர்க்க கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவின் பக்கம் இல்லை என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியா ரஷ்யா இடையிலான உறவு பிரத்தியேகமானது அதனை பயன்படுத்தி இந்தியா உக்ரைன் விவகாரத்தில் ஒரு முக்கியமான தீர்வை எட்ட உதவுமாறு வலியுறுத்துவதாகவும் கூறினார்.
மேலும் அவர் இந்தியா ரஷ்யா உடனான ஆயுத வர்த்தகத்தை பன்மடங்கு அதாவது 53 சதவிகிதம் எனும் அளவிற்கு குறைத்துள்ளதாகவும்
குறிப்பாக மிக்-29 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான ஆர்டர்களை இந்தியா ரத்து செய்து உள்ளதாகவும் கூறினார்.