ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கொவ் ரஷ்ய அரசின் சார்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது மேற்குலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்துவதாக எண்ணி கொண்டு அளவுக்கு அதிமாக ஒடுக்க முயற்சிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் அணு ஆயுதம் பயன்படுத்துவதற்தான வாய்ப்பே இல்லை எனவும் அத்தகைய எண்ணங்கள் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது ரஷ்யா மீதான தொடர் தடைகளால் மேற்குலக நாடுகள் உடனான ஒரு போரில் ஈடுபட்டுள்ளதாக உணர்வதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.