உக்ரேனிடம் சரணடையும் இரஷ்ய வீரர்கள்- யுக்ரேன் அதிபர் தகவல்

  • Tamil Defense
  • March 13, 2022
  • Comments Off on உக்ரேனிடம் சரணடையும் இரஷ்ய வீரர்கள்- யுக்ரேன் அதிபர் தகவல்

யுக்ரேனுக்குள் இரஷ்ய ஊடுருவல் தொடங்கியது முதல் தற்போது வரை 1300 யுக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது யுக்ரேன் இரஷ்ய இடையே உறுதியான முறையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.மேலும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது மேற்கு நாடுகள் உறுதியாக பங்கேற்கவும் , இரஷ்யா-யுக்ரேன் இடையே சமரசம் செய்து வைக்க இஸ்ரேல் கூறியதையும் வரவேற்று பேசியுள்ளார்.

இதுவரை 12000 இரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாகவும், 1205 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாவும் ,58 விமானங்கள் ,83 வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 362 டேங்க்,585 வாகனங்கள்,135 ஆர்டில்லரிகள் ஆகிய இரஷ்ய தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று 500 முதல் 600 இரஷ்ய வீரர்கள் யுக்ரேனிடம் சரணடைந்ததாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.