உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தி வரும் மர்ம கருவி !!

  • Tamil Defense
  • March 16, 2022
  • Comments Off on உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தி வரும் மர்ம கருவி !!

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ரஷ்யா உக்ரைன் மீது ஏவிய பலிஸ்டிக் ஏவுகணைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வெப்ப உணர் ஏவுகணைகளை ஏமாற்றும் நவீன தொழில்நுட்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.

அதாவது ஒரு அடி நீளம் கொண்ட இந்த கருவிகள் சிறிய அம்பு போல வெள்ளை நிறத்தில் வால் பகுதி மட்டும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் எறவும் இவை இஸ்கந்தர் பலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து வெளியாவதாகவும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு கருவியிலும் மின்னனு மற்றும் ரேடியோ சமிக்ஞைகளை வெளிபடுத்தும் பல்வேறு அதிநவீன கருவிகள் உள்ளன என்பதும் இந்த சமிக்ஞைகள் இஸ்கந்தர் ஏவுகணைகளை இடைமறிக்க வரும் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்பி விடும்.

ஆகவே தான் இதுநாள் வரை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இஸ்கந்தர் ஏவுகணைகளை மட்டும் வெற்றிகரமாக இடைமறிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.