காசாவில் இருந்து பயங்கரவாதிகளை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா திட்டம் !!

  • Tamil Defense
  • March 28, 2022
  • Comments Off on காசாவில் இருந்து பயங்கரவாதிகளை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா திட்டம் !!

ரஷ்ய நாட்டை சேர்ந்த தனியார் ராணுவ நிறுவனமான WAGNER உக்ரைனில் பயங்கரவாதிகளை களமிறக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது லெபனான் நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாஹ் உடன் WAGNER அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் பலனாக தற்போது 800 ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகளை உக்ரைனுக்கு அனுப்ப அந்த அமைப்பு ஒப்பு கொண்டுள்ளதாகவும்

விரைவில் அதாவது இந்த மாத இறுதிக்குள் 200 ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் உக்ரைனை வந்தடைய உள்ளதாக ரஷ்ய ஊடகமான நோவயா கஸெட்டா செய்தி வெளியிட்டுள்ளது.