போருக்கு முந்தைய நாள் மாயமான ரஷ்ய அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் !!

கடந்த 23ஆம் தேதி ரஷ்ய கடற்படையின் வடக்கு ஆர்ட்டிக் படைப்பிரிவை சேர்ந்த 12ஆவது படையணி மற்றும் 31ஆவது நீர்மூழ்கி டிவிஷனை சேர்ந்த 2 நீர்மூழ்கிகள் மாயமாகி உள்ளன.

அதாவது போரேய் ரக அணுசார் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கிகள் 2 தற்போது காத்ஸியேவோ கடற்படை தளத்தில் இல்லை என செயற்கை கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

வழக்கமாக 2 போரேய் மற்றும் 5 டெல்டா-4 ரகம் என மொத்தமாக 7 அணுசார் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கிகள் இந்த தளத்தில் காணப்படும் .

இந்த புகைப்படங்களின் படி மேற்குறிப்பிட்ட இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் தற்போது ஆர்ட்டிக் கடல்பகுதியில் எங்கோ ஆழத்தில் மறைந்துள்ளன என கூற முடியும்.