1 min read
உக்ரைனில் உலகின் சக்திவாய்ந்த பிரங்கியை களமிறக்கிய ரஷ்யா !!
ரஷ்யா உக்ரைனில் தனது உலகின் மிகவும் சக்திவாய்ந்த பிரங்கியான 2S7M MALKA ரக பிரங்கியை போரில் களமிறக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரங்கி சோவியத் காலகட்ட தயாரிப்பாகும் 1975ஆம் ஆண்டு சேவையில் இணைந்த இது ஆஃப்கன் போர், செச்சென் போர்கள், ஜார்ஜிய போர் உள்ளிட்ட போர்களில் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த பிரங்கியால் சுமார் 47 கிலோமீட்டர் தொலைவுக்கு 203 காலிபர் திறன் கொண்ட கனரக குண்டுகளை வீசி பலத்த சேதத்தை விளைவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உக்ரைன் போரில் இது களமிறக்கப்பட்டுள்ளது ரஷ்யா போரில் தனது தீவிரத்தன்மையை அதிகபடுத்தி வருவதற்தான அடையாளமாக கருதப்படுவதாக பரவலாக கருத்து நிலவுகிறது.