
உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 16,000 பேர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா உள்ளிட்ட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இப்படி சுமார் 16,000 போராளிகள் குறிப்பாக சிரிய அதிபர் ஆசாத்தின் ஆதரவு படையினர் களம் காண உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இதற்கான திட்டத்தை முன்வைத்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.