அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு தடை விதித்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 17, 2022
  • Comments Off on அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு தடை விதித்த ரஷ்யா !!

ரஷ்ய அதிபர் அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளை அடுத்து தற்போது ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ரஷ்ய வெளியுறவு துறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவு அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கென், பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின்

அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மைலி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சிஐஏ இயக்குனர் பில் பர்ன்ஸ்,

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்,

அமெரிக்க நிதியகத்தின் இயக்குனர் சமந்தா பவர்,முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி க்ளின்டன், கருவூல துணை செயலர் அதேவாலே அதெயமோ, எக்ஸிம் வங்கி இயக்குநர் ரீடா ஜோலூயிஸ்

ஆகியோர் தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் திரு.ஹன்டர் பைடன் மீதும் தடை விதித்துள்ள நிலையில் மேலும் பலர் மீது இத்தகைய நடவடிக்கை பாயும் என ரஷ்யா கூறியுள்ளது