இந்திய கொடியை தவிர்த்து மற்ற நாட்டு கொடிகளை மறைத்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 5, 2022
  • Comments Off on இந்திய கொடியை தவிர்த்து மற்ற நாட்டு கொடிகளை மறைத்த ரஷ்யா !!

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ் விரைவில் ஏவ இருந்த ராக்கெட்டில் இந்திய கொடியை தவிர்த்து வேறு நாடுகளின் கொடிகளை மறைத்துள்ளது.

அமெரிக்கா இங்கிலாந்து ஜப்பான் ஆகிய நாடுகளின் கொடிகளை மறைத்த நிலையில் இந்தியா தென்கொரியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் கொடிகளை மறைக்கவில்லை.

ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமித்ரி ரோகோஸின் கஸகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் எடுக்கப்பட்ட இதுகுறித்த காணொளியை வெளியிட்டு உள்ளார்.

சோயூஸ் ரக ராக்கெட்டான அது விரைவில் பல்வேறு நாடுகளை சேரந்த சுமார் 36 செயற்கைகோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.