ரஷ்யா வெளியிட்ட அதிகாரப்பூர்வ ராணுவ இழப்பு அறிக்கை !!
1 min read

ரஷ்யா வெளியிட்ட அதிகாரப்பூர்வ ராணுவ இழப்பு அறிக்கை !!

ரஷ்ய ராணுவம் உக்ரைனில் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் சந்தித்த உயரிழப்புகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது இதுவரை 1531 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாகவும் 3850 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் மேற்கத்திய மற்றும் உக்ரைனிய தகவல்கள் சுமார் 7000 முதல் 15,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.