உக்ரைனில் நடைபெறும் போரில் ரஷ்யா உயிரியியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அவர் ரஷ்யா உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் இருப்பதாக முன்வைத்துள்ள குற்றசாட்டை பொய்யான தகவல் எனவும் மறுத்துள்ளார்.
அதே நேரத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உயிரியியல் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.