உக்ரைனுடைய இரண்டாவது பெரிய நகரம் மீது ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதல் !!
1 min read

உக்ரைனுடைய இரண்டாவது பெரிய நகரம் மீது ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதல் !!

இன்று காலை உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டாவது பெயிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படைகள் மிக கடுமையான தாக்குதல் நடத்தின.

இதுவரை 10 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்து உள்ளதாகவும் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மற்றொரு பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் தரைப்படையின் பாசறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 உக்ரைனிய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, வெளியுறவு அமைச்சர் குலேபா போன்றோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.