மேற்கு நாடுகளுக்கு எதிராக அணிதிரட்டும் ரஷ்யா இந்தியாவுக்கு அழைப்பு !!

  • Tamil Defense
  • March 4, 2022
  • Comments Off on மேற்கு நாடுகளுக்கு எதிராக அணிதிரட்டும் ரஷ்யா இந்தியாவுக்கு அழைப்பு !!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது பல உலக நாடுகள் குறிப்பாத மேற்கு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தனிமைப்படுத்தும் விதமாக விளையாட்டு விஞ்ஞானம் வர்த்தகம் கல்வி என பல துறைகளில் தொடர்புகளை துண்டித்து வரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்கு நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவும் அணிதிரட்டும் நடவடிக்கைகளை துவங்கி உள்ளதாக தெரிகிறது இதன் ஒரு பகுதியாக விரைவில் மாஸ்கோவில் ஒரு மாநாட்டை நடத்த உள்ளது.

அதில் கலந்து கொள்ள இந்தியா சீனா வடகொரியா அஸர்பெய்ஜான் எத்தியோப்பியா உஸ்பெகிஸ்தான் சவுதி பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.