உக்ரைன் ரஷ்யா தயாரிக்கும் 14 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • March 20, 2022
  • Comments Off on உக்ரைன் ரஷ்யா தயாரிக்கும் 14 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதல் சிறப்பாக இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் 14 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை இணைந்து கலந்து பேசி தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

14 அம்சங்கள் என்னவென்று தெரியவில்லை ஆனால் இரண்டு நாடுகளும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைளின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

ரஷ்யாவின் விருப்பப்படி உக்ரைன் நேட்டோ உள்ளிட்ட எந்த அமைப்பிலும் இணைய கூடாது, வெளிநாட்டு படைகளோ அவர்களின் ஆயுதங்களோ உக்ரைனில் அனுமதிக்கப்பட கூடாது என்பதுவும்

உக்ரைனுடைய விருப்பப்படி இவற்றிற்கு ஒப்பு கொள்ள வேண்டுமெனில் ரஷ்யா தனது படைகளை உக்ரைனை விட்டு முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும் என்பதும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.