சமீபத்தில் தலைநகர் தில்லியில் பாலிவுட் இயக்குனர் வினோத் காப்ரி தனது வாகனத்தில் செல்லும் போது சாலையோரம் நீண்ட நேரம் ஓடும் இளைஞரை கண்டார்.
பின்னர் அந்த இளைஞரிடம் அவர் விசாரித்த போது தான் மெக்டோனால்ட்ஸ் கடையில் வேலை செய்வதாகவும் இரவு நேரத்தில் மட்டுமே ஒட நேரம் கிடைக்கிறது ஆகவே கடையில் இருந்து வீட்டுக்கு ஒடியே செல்வதாகவும் கூறினார்.
ப்ரதீப் மெஹ்ரா எனும் அந்த 19 வயது இளைஞர் உத்தராகண்ட மாநிலத்தின் அல்மோரா பகுதியை சேர்ந்தவர் ஆவார் இந்திய ராணுவத்தில் இணையும் எண்ணத்தில் இப்படி பயிற்சி மேற்கொண்டது தெரிய வந்தது.
இந்த காணொளி வைரலான நிலையில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா இந்த இளைஞருக்கு உதவ முன்வந்தார்.
இதையடுத்து உத்தராகண்ட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் இணையும் குமாவோன் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் காலிதாவுடன் அவர் பேசியுள்ளார்.
அப்போது லெஃப்டினன்ட் ஜெனரல் காலிதா அந்த இளைஞர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற தேவையான அனைத்து உதவிகளையும் குமாவோன் ரெஜிமென்ட் மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.