உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை QUAD ஏற்று கொள்கிறது !!

  • Tamil Defense
  • March 23, 2022
  • Comments Off on உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை QUAD ஏற்று கொள்கிறது !!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு தொடர்ந்து அழுத்தம் தந்த நிலையில்

தற்போது க்வாட் அமைப்பானது உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஏற்று கொள்வதாகவும் இதனால் ஒத்துழைப்பில் பாதிப்பு இருக்காது எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

விரைவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் காணொளி வாயிலாக சந்தித்து பேச உள்ளனர் அப்போது உக்ரைன் விவகாரமும் பேசப்படும் என கூறப்படுகிறது.