உக்ரைன் அளித்த ஆஃபர்; ஸெலன்ஸ்கியை தொலைத்துகட்டி விடுவேன் என்று கூறிய புதின் !!

  • Tamil Defense
  • March 30, 2022
  • Comments Off on உக்ரைன் அளித்த ஆஃபர்; ஸெலன்ஸ்கியை தொலைத்துகட்டி விடுவேன் என்று கூறிய புதின் !!

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு கைப்பட ஒரு அமைதி ஒப்பந்த ஆஃபரை எழுதி அனுப்பிவைத்துள்ளார்.

அதனை படித்து பார்த்த ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அவனை தொலைத்து கட்டி விடுவேன் என கோபம் தலைக்கு ஏறி உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி பற்றி குறிப்பிட்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவை சேர்ந்த பெரும் செல்வந்தரான ரோமன் ஆப்ரமோவிச் தனிப்பட்ட முறையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமைதி ஏற்படுத்தும் தூதுவராக செயல்பட்டு வருகிறார்.

அவர் மூலமாக தான் இந்த கடிதத்தை உக்ரைன் அதிபர் கொடுத்து அனுப்பியதும் அதனை படித்து பார்த்து விட்டு புடின் இப்படி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட அந்த கடிதத்தில் உக்ரைன் தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அதனால் தான் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இப்படி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.