ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் 8 ராணுவ உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை விரைவாக கைபற்றி விட முடியும் எனவும் தலைநகர் க்யிவ் 2-3 நாட்களில் வசமாகி விடும் பலத்த எதிர்ப்பு இருக்காது எனவும் ரஷ்ய அதிபருக்கு அவரது அதிகாரிகள் அளித்த ரிப்போர்ட் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுதவிர ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அந்நாட்டின் உளவுத்துறை அமைப்பான FSBயில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மீதும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உத்திகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்கு நாடுகளின் உளவுத்துறை வட்டாரங்கள் ரஷ்யா போரில் வெற்றி பெறுவதற்கு மிக கொடுரமான தாக்குதல் முறைகளை கையாளலாம் எனவும் எச்சரித்துள்ளன.