தில்லியில் தீவிரமடையும் அஹிர் ரெஜிமென்ட் கோரிக்கை போராட்டம் !!

ஹரியானா மாநிலத்தின் தெற்கு பகுதி அஹிர்வால் பிரதேசம் என அழைக்கப்படுகிறது இப்பகுதியை பூர்வீகமாக கொண்ட மக்கள் அஹிர் இனக்குழுவினர் ஆகும்.

மிகவும் நீண்ட காலமாக இவர்கள் இந்திய தரைப்படையின் ஜாட் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வருகின்றனர் ஆனால் இவர்கள் தங்களுக்கென தனி ரெஜிமென்ட் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது தலைநகர் தில்லிக்கு செல்லும் குர்காவன் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடிக்கு அருகே அஹிர் இன மக்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கை புதிதல்ல மிகவும் நீண்ட காலமாகவே இருக்கும் கோரிக்கை ஆகும் தேர்தல்களின் போது மட்டும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பயன்படுத்தி கொள்ளும்.

தற்போது இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தீபிந்தர் ஹீடா அஹிர் ரெஜிமென்ட் உருவாக்கப்பட வேண்டும் எனவும்

ஆம் ஆத்மி கட்சியை சேரந்த பாராளுமன்ற உறுப்பினர் சுஷில் குப்தா இந்த விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் எழுப்புவதாகவும் உறுதி அளித்துள்ளார் அஹிர் மக்கள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.

அஹிர் என்றால் பயமற்றவர்கள் என கூறப்படுகிறது இதனை மெய்ப்பிக்கும் விதமாக அஹிர் ராணுவ வீரர்கள் சிறப்பாக சேவையாற்றி உள்ளனர் குறிப்பாக 1962ஆம் ஆண்டு குமாவோன் ரெஜிமென்ட்டை சேர்ந்த 120 வீரர்கள் லடாக்கின் ரெசாங்லா பகுதியை தீரமாக போரிட்டு காத்தனர்.

120 வீரர்களும் கடைசி மூச்சு வரை சண்டையிட்டனர் அவர்களில் 114 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் அவர்களின் தீரத்தால் தான் இன்று ரெசாங்லா இந்தியாவுடன் உள்ளது அந்த 120 வீரர்களும் அஹிர் இன வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.