உக்ரைனுக்கு மறைமுகமாக போர் விமானங்கள் வழங்க ஒப்பு கொண்ட போலந்து !!

  • Tamil Defense
  • March 10, 2022
  • Comments Off on உக்ரைனுக்கு மறைமுகமாக போர் விமானங்கள் வழங்க ஒப்பு கொண்ட போலந்து !!

போலந்து அரசு உக்ரைனுக்கு மறைமுகமாக தனது நாட்டின் விமானப்படை பயன்படுத்தி வரும் மிக் 29 ரக போர் விமானங்களை வழங்க முன்வந்து உள்ளது.

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட முடிவின்படி போலந்து விமானப்படை 28 மிக்-29 போர் விமானங்களை ஜெர்மனியில் உள்ள அமெரிக்காவின் ராம்ஸ்டெய்ன் விமானப்படை தளத்திற்கு மாற்றம் செய்யும்.

அங்கிருந்து அந்த மிக்29 போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் விமானப்படைக்கு கைமாறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இதன்மூலம் மறைமுகமாக உக்ரைனுக்கு போர் விமானங்கள் கிடைக்கும்.

5 மிக்29ஏ, 11 மிக்29எம், 3 மிக்29யுபிஎம், 8 மிக்29ஜி மற்றும் 2 மிக்29ஜிடி ஆகிய விமானங்களை தான் போலந்து அரசு ஒப்படைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அமெரிக்கா போலந்து நாட்டிற்கு 28 அதிநவீன எஃப்16 ரக போர் விமானங்களை இலவசமாக வழங்க உள்ளதும் கூடுதல் தகவல் ஆகும்.