1 min read
உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க போலந்து மறுப்பு ரஷ்ய மிரட்டல் காரணமா ??
அமெரிக்க அரசு சமீபத்தில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கலாம் அதில் பிரச்சினை ஏதும் இல்லை என கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு போலந்து பயன்படுத்தி வரும் மிக்29 போர் விமானங்களில் 29ஐ வழங்கினால்
அமெரிக்கா 29 எஃப்-16 ரக போர் விமானங்களை போலந்து நாட்டின் விமானப்படைக்கு வழங்கும் என தெரிவித்தது.
ஆனால் போலந்து அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது உக்ரைனுக்கு தனது போர் விமானங்களை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுடைய போர் விமானங்கள் எரிபொருள் ஆயுதங்களை நிரப்பி கொள்ள இடமளிக்கும் நாடுகளும் போரில் இறங்கியதாக கருதப்படும் என மிரட்டல் விடுத்ததையடுத்து போலந்து மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.