சமீபத்தில் பாகிஸ்தான் இந்திய கடற்படையின் அதிநவீன கல்வரி நீர்மூழ்கி ஒன்றை அந்நாட்டு எல்லைக்குள் இடைமறித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் முப்படைகளின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் இந்த செய்தியையும் அதுபற்றிய காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கண்காணிப்பு மற்றும் வேட்டை விமானம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
ஆனால் இந்திய கடற்படை நீர்மூழ்கி படையினர் வேண்டுமென்றே பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றே கடல்பரப்பிற்கு மேலே வந்து இந்திய நீர்மூழ்கிகளின் வலிமையை உணர்த்த இப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.