1 min read
சீன டாங்கி கோளாறு பாக் ராணுவ அதிகாரி மரணம் !!
பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சீன தயாரிப்பு டாங்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறால் கேப்டன் அந்தஸ்திலான ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.
அதாவது அந்த டாங்கியின் குழாயில் குண்டு வெளியேறாமல் சிக்கி வெடித்து சிதறியது இதில் கேப்டன் உயிரிழந்த நிலையில் டாங்கியின் கன்னர் படுகாயம் அடைந்துள்ளார்.
அனேக பட்சமாக விபத்துக்குள்ளான டாங்கி பாகிஸ்தான் இறக்குமதி செய்த MBT3000 என அறியப்படும் VT4 பிரதான சண்டை டாங்கியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.