பாகிஸ்தான் தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹமூத் உஸ் ஸமன் கான் பாகிஸ்தான் தரைப்படையின் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமை அதிகாரி ஆவார்.
இவர் தற்போது இந்திய பிரம்மாஸ் ஏவுகணை ஊடுருவலை தடுக்க தவறிய காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர இவருடன் சேர்த்து இரண்டு மூத்த பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகளும் ஒய்வெடுக்க வற்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பாகிஸ்தான் விமானப்படையின் துணை தளபதியான ஏர் மார்ஷல் அஹமது ஷெஹ்சாத் லெகாரியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.