ஒரு ரஷ்ய வீரர் நேட்டோ மண்ணில் கால் வைத்தாலும் போர் தான்- பிரிட்டன் !!
பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு பிரிட்டன் தனது வாக்குறுதியை அளித்துள்ளது.
அதாவது அந்நாட்டின் தெற்கு டோர்சேட் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ட்ராக்ஸ் பிரிட்டன் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை உக்ரைன் விவகாரத்தில் எடுத்துள்ள நிலைபாட்டிற்காக பாராட்டி பேசினார்.
மேலும் அவர் பேசும் போது பிரிட்டன் அரசாங்கம் நேட்டோ நாடுகளில் ஒரு ரஷ்ய வீரர் கால்வைத்தாலும் கூட கடுமையான ராணுவ பதிலடி தரப்படும் என வாக்குறுதி அளிக்க வேண்டும் என கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கிறது நிச்சயமாக ரஷ்யா நேட்டோ நாடுகளீ மீது தாக்குதல் நடத்தினால் ராணுவ பதிலடி தரப்படும் என கூறினார்.