எங்களது படையணிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • March 22, 2022
  • Comments Off on எங்களது படையணிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை இந்திய விமானப்படை !!

சமீபத்தில் பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அப்போது பாகிஸ்தான் சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் சமாளிக்க எங்களிடம் போதுமான படையணிகள் இல்லை எனவும்

தற்போது இந்திய விமானப்படையிடம் உள்ள திறன்களை தக்கவைக்க மேலும் அதிகளவில் நிதி ஆதாரங்கள் தேவைப்படும் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு 34 படையணிகள் இருந்தன தற்போது 29-30 படையணிகள் உள்ளன, இன்னும் மூன்று ஆண்டுகளில் 26-27 என்ற அளவை தொடக்கூடும்.

ஆகவே இந்திய விமானப்படைக்கு விரைவாக தேஜாஸ் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை வாங்கி படையில் இணைக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது.