அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கி அழிக்கும் புதிய வடகொரிய அணு ஆயுத ஏவுகணை !!

நேற்று முன்தினம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரிய ராணுவம் ஒரு புத்தம் புதிய அணு ஆயுத ஏவுகணையை அறிமுகம் செய்தது.

இத்தோடு நின்று விடாமல் ஹ்வாசாங்-17 என்ற இந்த ஏவுகணை விண்ணில் 6000 கிலோமீட்டர் பயணித்து சர்வதேச கடல்பகுதிக்குள் விழுந்தது, இது ஹ்வாசாங்-15,16 ஆகிய ஏவுகணைகளின் வரிசையில் வந்த புதிய ஏவுகணை ஆகும்.

இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்கி அழிக்க முடியும் என வடகொரிய அரசு மற்றும் பாதுகாப்பு துறை அறிக்கை கூறுகிறது.

பல பாதுகாப்பு நிபணர்கள் இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் அளவை பாரக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

இந்த ஏவுகணையின் சோதனையை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வடகரியாவை வன்மையாக கண்டித்து உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.