
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே ஈரானுடன் அதிக அளவில் நெருக்கம் காட்டி வருகிறது.
தற்போது அமெரிக்கா தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஈரானிய ராணுவத்தை விலக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரான் உடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் அமெரிக்க அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து சாடி வரும் நிலையில் தற்போது இந்த புதிய முடிவை இஸ்ரேலிய பிரதமர் பென்னட் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.