1 min read
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் என்னென்ன இடம்பெற்றன !!
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுடைய கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய தரைப்படைக்கான தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கான டோர்னியர் ரோந்து விமானங்கள் முக்கிய இடம்பெற்றன.
இதுதவிர இரவில் பாரக்கும் கருவிகள், துப்பாக்கிகளில் குறிபார்க்க உதவும் கருவிகள், இலகுரக கவச வாகனங்கள்,
இந்திய விமானப்படைக்கான உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட 70 “HTT-40” ரக அடிப்படை பயிற்சி விமானங்கள் ஆகியவை முக்கிய இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.