
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் ரஷ்யா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ கூட்டமைப்பு பதிலடி தரும் என எச்சரித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் பேசிய அவர் தற்போது நாம் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம் மேலும் இந்த நபர் எவ்வளவு கொடுரமானவர் என்பதை உணர வேண்டும் என ரஷ்ய அதிபரை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பா சென்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.