ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் படைகளை குவிக்கும் நேட்டோ !!

ஐரோப்பாவில் நேட்டோ மிகப்பெரிய அளவில் படைகளை பல்வேறு வகையான கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொண்டு குவித்து வருகிறது.

பல நேட்டோவில் நாடுகளின் விமானப்படைகளுக்கு சொந்தமான சி-17, சி-5, சி-130, ஏ330 போன்ற பல்வேறு வகையான விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி பேசிய மூத்த நேட்டோ ராணுவ அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் பாஸ்கல் டெலர்ஸெ இந்த நடவடிக்கைகள் நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்

தற்போது நிலவும் சிக்கலான காலகட்டத்தில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் ஒற்றுமையை உணர்த்துவதாக அமையும் என ஊடகங்களிடம் தெரிவித்தார்.