காந்தஹார் விமான கடத்தல் பயங்கரவாதி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டு கொலை இந்தியாவின் “ரா” செயலா ??
பாகிஸ்தானின் கராச்சி நகரில் காந்தஹார் விமான கடத்தலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான மிஸ்த்ரி ஸாஹூர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.
காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் IC814 விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகளில் ஒருவன் தான் மிஸ்த்ரி ஸாஹூர் இவனுக்கு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களிலும் தொடர்பு உண்டு.
இப்படி பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக இருந்த இவன் பெயரை ஸாஹீத் என மாற்றி கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் இது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
இவனது இறுதி சடங்கில் ஜெய்ஷ் இ மொஹமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் இவர்களில் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் ஆசாரின் தம்பி ரவுஃப் அஸ்காரும் அடக்கம்.
அந்த விமானத்தை மவுலானா மசூத் ஆசார், முஷ்தாக் அஹமது ஸர்கார், அஹமது ஒமர் சயீத் ஷேக் போன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க கோரி மிஸ்த்ரி ஸாஹூர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கடத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவின் உளவு அமைப்பான ரா இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது மிகவும் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் கருதப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.