தலைநகர் கீயிவ்வை நெருங்கும் மிகப்பெரிய ரஷ்ய ராணுவ படையணி !!

உக்ரைன் தலைநகர் கீயிவ்வை கடந்த சில நாட்களாக கைபற்ற ரஷ்ய படைகள் சற்றே திணறிய நிலையில் மீண்டும் கீயிவ்வை கைபற்ற முயற்சி நடைபெறுகிறது.

அதன்படி ரஷ்ய தரைப்படையின் சுமார் 60 கிலோமீட்டர் நீளம் கொண்ட கான்வாய் ஒன்றை செயற்கை கோள் புகைப்படங்கள் வாயிலாக கண்டறிந்து உள்ளனர்.

டாங்கிகள், கவச வாகனங்கள், லாரிகள், சப்ளை வாகனங்கள் போன்றவை இதில் அடக்கம் எனவும் சில இடங்களில் மூன்று வரிசை அகலத்திற்கு பெரிதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் உளவுத்துறை ரஷ்யர்கள் தற்போது யுக்திகளை மாற்றி உள்ளதாகவும் பிரங்கி தாக்குதலை அதிகம் நடத்தலாம் எனவும் கூறுகின்றனர் ஆகவே கீயிவ் மீது கடும் தாக்குதல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.