இந்திய அரசின் வர்த்தக துறை அமைச்சகம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெயின்மெட்டால் நிறுவனம் மற்றும் இந்தியாவின் பெல் பொதுத்துறை நிறுவனம் இடையேயான ஒத்துழைப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து கூட்டு தயாரிப்பு முறையில் ஒர்லிகான் ஸ்கைஷீல்டு எனும் ரீவால்வர் ரக அதிநவீன வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளன.
இந்திய தரைப்படைக்கு இத்தகைய சுமார் 220 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளின் தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.