J10C ரக போர் விமானங்களை படையில் இணைத்த பாகிஸ்தான் விமானப்படை !!

  • Tamil Defense
  • March 12, 2022
  • Comments Off on J10C ரக போர் விமானங்களை படையில் இணைத்த பாகிஸ்தான் விமானப்படை !!

பாகிஸ்தான் விமானப்படை நேற்று கம்ரா விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ஜே-10சி ரக போர் விமானங்களை படையில் இணைத்துள்ளது.

இந்த விழாவில் பிரதமர் இம்ரான் கான், தரைப்படை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, விமானப்படை தளபதி ஸாஹீர் அஹமது பாபர் கடற்படை தளபதி அம்ஜத் கான் நியாஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட ஜே10சி ரக போர் விமானமானது நான்காம் தலைமுறை ஏவுகணைகளை சுமக்கும் எனவும் ஜே17 போர் விமானத்தில் உள்ளதை விடவும் பெரிய ஏசா ரேடாரை கொண்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் படையில் இணைக்கும் போர் விமானங்கள் இவை என்பதும் சீன தயாரிப்பு போர் விமானங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.