உக்ரைன் அதிபரிடம் சரணடைய வலியுறுத்திய இஸ்ரேலிய பிரதமர் !!

இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கியை சரணடைய வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று கொள்வதன் மூலமாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான யோசனையை இஸ்ரேலிய பிரதமர் உக்ரைன் அதிபரிடம் முன்வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு மூத்த உக்ரைனிய அதிகாரி இஸ்ரேலிய நாளிதழிடம் தெரிவித்துள்ள நிலையில்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் இதனை முற்றிலுமாக ஆதாரமற்ற தகவல்கள் என கூறி மறுப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.