ஈராக் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ்தான் மாநிலத்தின் தலைநகர் எர்பில் மீது பல ஏவுகணைகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டன.
FATEH-110 எனப்படும் அந்த இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் எர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தின் மீது மோதி தாக்கின.
இந்த தாக்குதலில் யாருக்கும் எவ்வித சேதமில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளது எனினும் இந்த தாக்குதல் உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஈரான் தரப்பு அமெரிக்க தூதரக வளாகத்தில் இயங்கி வரும் மொசாத் அமைப்பின் பிரிவை தனது நாட்டின் முக்கிய தளபதி காசெம் சொலைமானியின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக தாக்கியதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.