1 min read
பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவிய ஈரான் !!
ஈரான் நாட்டில் இருந்து பாகிஸ்தானுடைய பான்ஜ்குர் பகுதி மீது ஈரான் நாட்டு ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வழக்கமான பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக ஏவப்பட்ட இந்த ஏவுகணையால பாகிஸ்தான் தரப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிரம்மாஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒன்றும் இதை போல பாகிஸ்தானுக்குள் தவறாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.