இந்திய விமானப்படை சமீபத்தில் தவறுதலாக பிரம்மாஸ் ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் விசாரணையை துவங்கி நடத்தி வருகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் “க்ரூப் கேப்டன்” அந்தஸ்திலான விமானப்படை அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இனி விசாரணை தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் தெரிய வரும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.