இரண்டாம் கட்டத்தை எட்டிய இந்தியாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டம் !!
1 min read

இரண்டாம் கட்டத்தை எட்டிய இந்தியாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டம் !!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அக்னி-1 ஏவுகணையின் பூஸ்டர்களை பயன்படுத்தி ஹைப்பர்சானிக் ஏவுகணையை ஏவி டெமோ செய்து காண்பித்தது.

தற்போது அக்னி-1 ஏவுகணையின் இரண்டு நிலை பூஸ்டர்களை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக கே-4 ஏவுகணையின் பூஸ்டர்களை இணைப்பதன் மூலமாக 4 முதல் 5 மடங்கு வரை இயக்க வரம்பை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த கே-4 ரக ஏவுகணையின் பூஸ்டர்களை ASAT எனப்படும் செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையில் பயன்படுத்தி வெற்றிகரமாக சோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த கே-4 ரக ஏவுகணையின் பூஸ்டர்களால் அதிக எரிபொருளை சுமக்க முடியும் ஆகவே இயற்கையாகவே ஹைப்பர்சானிக் ஏவுகணைகளின் இயக்க வரம்பும் பன்மடங்கு அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.

இந்தியா HGV- HYPERSONIC GLIDE VEHICLE மற்றும் HCM – HYPERSONIC CRUISE MISSILE ஆகிய இரண்டு வெவ்வேறு விதமான ஹைப்பர்சானிக் ஆயுதங்களை வடிவமைத்து தயாரிக்க உள்ளது.

HGV என்பது ஹைப்பர்சானிக் மிதவை வாகனம் ஆகும் 100 கிலோமீட்டர் விண்ணில் பாய்ந்து சென்று பின்னர் சுமார் 8000 கிலோமீட்டர் தொலைவு வரை மிதந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும்.

அதுவே HCM ஏவுகணை 32 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்ணில் பாய்ந்து சென்று பின்னர் இலக்கை நோக்கி மாக் 6 முதல் 7 வரையிலான வேகத்தில் பாயும் திறன் கொண்டதாகும்.