ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்ற லைன் ஃபயரிங் சோதனையை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் பிரங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பிரங்கி தொழிற்சாலை இந்த பிரங்கிகளை தயாரித்துள்ளது சில குறைகளை நிவர்த்தி செய்த நிலையில் தற்போது அவை சோதனை செய்யப்பட்டுள்ளன.
இரண்டு பிரங்கிகளும் நிலையான இடத்தில் இருந்து தலா 45 ரவுண்டுகளை சுட்டன பின்னர் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தலா 45 ரவுண்டுகளை சுட்டன.
இப்படி இரண்டு பிரங்கிகளும் தலா 90 ரவுண்டுகளை எவ்வித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனை தொடர்ந்து படை இணைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 2018ஆம் ஆண்டு 118 தனுஷ் பிரங்கிகள் ஆர்டர் செய்யப்பட்டு 19 டெலிவரி செய்யப்பட்ட நிலையில் தர குறைபாடு பிரச்சினைகளால் தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.