உக்ரைனில் படித்து வந்த சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் எனும் 21 வயது இளைஞர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது அந்நாட்டின் துணை ராணுவத்தில் இணைந்தார்.
இந்த தகவலை வீட்டிற்கு தெரிவித்த அவர் தனது பெற்றோர் உறவினர்கள் திரும்பி வருமாறு அழைத்த போது தான் வரப்போவது இல்லை என மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் வீடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அதிகாரிகள் தங்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாகவும் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தங்களது மகனை மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் போர்க்களத்தில் சாய் நிகேஷ் ரவிச்சந்திரனை உக்ரைன் அரசின் உதவியின்றி கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.