உக்ரைன் போரில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த இந்திய மாணவர் !!
உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய பொறியியல் மாணவர் ஒருவர் களம் காண்கிறார் எனும் செய்தியை ஆரம்பகட்டத்திலேயே வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் தற்போது அது உறுதியாகி நாடு முழுவதும் வைரலாகி வருகிறது கோயம்புத்தூரை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் தான் அந்த மாணவர் ஆவார்.
பள்ளிகல்வி முடித்த கையோடு தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் கலந்து கொண்ட அவர் பின்னர் உடற்தகுதிதேர்வின் போது உயரம் குறைவு காரணமாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் அவர் அமெரிக்க ராணுவத்தில் இணையும் நோக்கிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
அங்கேயும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் சென்று க்யிவ் நகரில் உள்ள தேசிய பொறியியல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்து வந்தார்.
அப்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவே உக்ரைன் அதிபர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உக்ரைனை பாதுகாக்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தார் அப்படி வந்தோருக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சாய்நிகேஷ் உக்ரைன் துணை ராணுவத்தின் ஜார்ஜியன் லிஜியன் எனும் முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் ஆன படையணியில் இணைந்துள்ளார் இதை தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்தார் அவரை திரும்பி வர கோரியும் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தருமாறு மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து மத்திய மாநில உளவுத்துறை அமைப்புகள் புலனாய்வை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.