அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன JDAM குண்டுகளை வாங்க ஆர்டர் !!

இந்திய விமானப்படை தனது தேஜாஸ் போர் விமானங்களின் திறன்களை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன JDAM ரக குண்டுகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

JOINT DIRECT ATTACK MUNITION எனப்படும் இந்த அதிநவீன குண்டுகள் 80 கிலோமீட்டர் தொலைவு வரையில் சென்று இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை ஏற்கனவே இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள குறிப்பாக பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன SPICE குண்டுகளை போன்றவையாகும்.

தற்போது இந்திய விமானப்படையில் இரண்டு தேஜாஸ் படையணிகள் உள்ள நிலையில் எதிர்காலத்தில் இவை முக்கிய விமானங்களாக விளங்கும் ஆகவே இவற்றின் திறன்களை விமானப்படை அதிகரிக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.