எதிர்கால கொள்முதலுக்கான அசத்தல் தளவாடங்களின் பட்டியலை வெளியிட்ட கடற்படை !!
1 min read

எதிர்கால கொள்முதலுக்கான அசத்தல் தளவாடங்களின் பட்டியலை வெளியிட்ட கடற்படை !!

இந்திய கடற்படை எதிர்கால கொள்முதலுக்கான 21 தளவாடங்கள் அடங்கிய பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அடுத்த தலைமுறை நாசகாரி போர்க்கப்பல்கள், 2ஆவது விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட சில அசத்தல் தளவாடங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த பட்டியலை கீழே காணலாம்;

1) கொச்சி கப்பல் கட்டுமான தளத்தால் கட்டப்பட உள்ள 6 அடுத்த தலைமுறை ஏவுகணை கலன்கள்,

2) விசாகப்படினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் கட்டும் 5 படையணி உதவி கப்பல்கள்

3) அதிக உயர மற்றும் இடை உயர தொலைதூர ஆளில்லா விமானங்கள்

4) பலதிறன் விமானந்தாங்கி கப்பல் போர் விமானங்கள்

5) உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரண்டாவது விமானந்தாங்கி போர் கப்பல்

6) ஆறு அடுத்த தலைமுறை கார்வெட் ரக போர் கப்பல்கள்

7) ஆறு அடுத்த தலைமுறை நாசகாரி போர் கப்பல்கள்

8) ஒரு தேசிய மருத்துவமனை கப்பல்

9) ஆறு அடுத்த தலைமுறை அதிவேக தாக்குதல் கலன்கள்

10) அடுத்த தலைமுறை அதிவே இடைமறிப்பு கலன்கள்

11) மின்னனு போர் முறை அமைப்பு GSAT-2 செயற்கைகோள்

12) மிகப்பெரிய ஆளில்லா நீர்மூழ்கிகள், தொலைதூர மற்றும் இடைத்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்

13) போர் கப்பல்களுக்கான இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள்

14) ஏற்கனவே உள்ள மற்றும் எதிர்கால போர் கப்பல்களுக்கான செங்குத்தாக பாயும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள்

15) அதிக நேரம் இயங்கும் திறன் கொண்ட தானியங்கி நீரடி வாகனங்கள் போன்றவை இந்த பட்டியலில் அடக்கம்.