பட்ஜெட் செலவுகளை கண்காணிக்க குழு அமைக்கும் பாதுகாப்பு அமைச்சகம் !!

  • Tamil Defense
  • March 10, 2022
  • Comments Off on பட்ஜெட் செலவுகளை கண்காணிக்க குழு அமைக்கும் பாதுகாப்பு அமைச்சகம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கான பட்ஜெட் செலவு செய்யப்படும் போக்கை கண்காணிக்க பிரத்யேக குழு ஒன்றை அமைக்க உள்ளது.

இந்த குழுவானது முப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எப்படி செலவு செய்கின்றன, சரியாக செலவு செய்கின்றனவா ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் செலவு செய்யப்படுகிறதா என கண்காணிக்கும்.

இந்த கண்காணிப்பு குழுவில் முப்படைகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பர் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.